பயிற்சி வகுப்பு முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த 13 வயது சிறுமியை 17 சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் 13 வயது சிறுமி பயிற்சி வகுப்பு முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாத காரணத்தினால் சிறுமியை தேடி அவரது தந்தை வந்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததில் அருகில் இருந்த மருந்து கடையில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்த போது மருந்துக் கடையின் ஷட்டர் பூட்டப்பட்டு இருந்துள்ளது. ஆனால் அந்த கடையின் விளக்குகள் வாசலில் எரிந்து கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த சிறுமியின் தந்தை ஷட்டரை தட்டியுள்ளார். அந்த 17 வயது சிறுவன் கடைக்குள் இருந்தபடி ஷட்டரை திறந்துள்ளான். அப்போது கடைக்குள் தனது மகள் சுயநினைவின்றி, ஆடைகள் களைந்து இருப்பதை சிறுமியின் தந்தை பார்த்துள்ளார்.
அதனை தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 328 மற்றும் 376, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.